search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழல் ஜெயில் கைதிகள்"

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர். #PuzhalJail #Prisoners
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் குற்றவாளிகள் என மொத்தம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முதல் முறையாக குற்றம் செய்து கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முதல் முறையாக குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    இதற்காக சிறை வளாகத்தில் உள்ள ஆடிட்டோரிடயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் முறை குற்றவாளிகள் 150 பேருக்கு நீதிபதிகள் தனித்தனியாக ஆலோசனை மற்றும் அறிவுரை கூறினர்.



    ஒவ்வொரு கைதிகளுக்கும் சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது சிறையில் இருந்து செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த கவுன்சிலிங் 3 மணி நேரம் நடந்தது.

    புழல் சிறையில் 150 கைதிகளுக்கு நீதிபதிகள் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #PuzhalJail #Prisoners

    புழல் ஜெயில் கைதிகள் கடத்தல் கும்பலுடன் பேசி இருப்பது தெரிய வந்து தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuzhalJail

    சென்னை:

    குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பதற்காக ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது என்று செய்திகள் வெளியாகின.

    ஜெயில் கைதிகள் வசதியாக இருக்கும் படங்களும் செல்போன் மூலம் வெளியானது. லஞ்ச புகார்களும் எழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    கடந்த 3-ந் தேதி புழல் சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதாகி புழல் ஜெயிலில் இருக்கும் ஒருவரிடம் இருந்தும், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த ஜெயிலில் இருக்கும் முகமது ரியாஸ் என்பவரிடம் இருந்தும் 2 நவீன ஆன்ட்ராய்டு செல்போன்களும், ஒரு சாதாரண செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இந்த செல்போன்களை வைத்திருந்த கைதிகள், ஜெயிலில் இருந்தபடியே வாட்ஸ்-அப் மூலம் வெளி நாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசி இருப்பது தெரியவந்தது.

    இதுதவிர ஜெயிலில் இருந்தே செல்போன் மூலம் பல்வேறு சமூக விரோத செயல்களில் இவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 2 கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த கைதிகளின் செல்போன் தொடர்புகளை கண்டறிவதற்காக சி.பி.சி. ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. சைபர் குற்றப்பிரிவு போலீசார் அந்த செல்போன்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். ஜெயில் கைதிகள் செல்போன் பயன்படுத்த உதவியவர்கள் குறித்தும் விசாரணை நடை பெற இருக்கிறது. #PuzhalJail

    ×